Thursday, September 25, 2008

 

துளிப்பாக்கள்

சொந்த ஊர்
ரயில் நகர்கிறது
கூடவே என் மனசும்

நம்பிக்கை இழக்காமல்
பரண் மேல் கிடக்கிறது
கில்லி தாண்டு

பழைய சாப்பாடு
அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி
கூட்டாஞ்சோறு

எவ்வளவு முயன்றும்
சந்திக்க முடியவில்லை
சாஃப்ட்வேர் அப்பா

கடற்கரை வீடு
எட்டி எட்டி பார்க்கின்றன
சின்னஞ்சிறு நண்டுகள்

அப்பாவின் உடல்
அழுதபடி அமர்ந்திருக்கிறது
அடித்து வளர்த்த நாய்

வந்த தூக்கத்தைத்
துரத்திக் கொண்டிருக்கிறான்
வானில் முழுநிலா

பள்ளியின் முன்னே
கை தட்டும் பொம்மை
மிட்டாய் கடிகாரம்


ஆர். வி. பதி

This page is powered by Blogger. Isn't yours?